ஈகுவார்பாளையத்தில் மக்களை அச்சுறுத்திய பாழடைந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அகற்றம்

மக்களை, சிறுவர்களை அச்சுறுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து ஈகுவார்பாளையம் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மக்களை கடந்த 5 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டது.
மக்களை கடந்த 5 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியின் 6 ஆவது வார்டில் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி ஆலயம் அருகே ஆபத்தான நிலையில் எப்போது வேண்டும் என்றாலும் விழலாம் என்கிற நிலையில் இருந்த குடிநீர்நிலைத் தொட்டியை சமூக ஆர்வலரும், ஊராட்சி வார்டு உறுப்பினமான என்.சிவாவின் முயற்சியால் இடித்து அகற்றப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி 6 ஆவது வார்டு ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி ஆலயத்தின் முன் 100 மீட்டர் தொலைவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த மேல்நிலைத் தொட்டி பாழடைந்து மேல்நிலைத் தொட்டியை தாங்கி நிற்கும் கம்பங்களில் விரிசல் ஏற்பட்டும் காட்சி அளிக்க துவங்கியது.

அதிலும் கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத சூழலில் இருந்த இந்த மேல்நிலைத்தொட்டி எப்போது வேண்டும் என்றாலும் விழலாம் என்ற சூழலில் இருந்தது. 

இந்த மேல்நிலைத்தொட்டி அருகே உள்ள வீடுகளில் வசிப்போர், ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி ஆலயத்துக்கு வந்து போகும் பக்தர்கள் இந்த மேல்நிலைத் தொட்டியை அச்சத்துடன் பார்த்து வந்தனர்.

மேலும் இந்த மேல்நிலைத் தொட்டி அருகே குழந்தைகள் விளையாடுவதும், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியில் பெண்கள் வேலை செய்வதுமாக ஆபத்துடன் அப்பகுதியில் உலவி வந்தனர்.

இந்நிலையில் சமூக ஆர்வலரும், ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற 6 ஆவது வார்டு உறுப்பினருமான என்.சிவா, இது குறித்து கும்மிடிப்பூண்டியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக ஈகுவார்பாளையத்தில் பெய்து வந்த தொடர் மழையால் இந்த மேல்நிலைத் தொட்டியை தாங்கி நின்ற கம்பங்கள் சாய்ந்த நிலையில் மிக மோசமாக காணப்பட்டது. 

இது குறித்து வார்டு உறுப்பினர் என்.சிவா கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவனிடமும், ஒன்றிய பொருளாளர் நரசிம்மனிடமும் நேரில் மேல்நிலைத் தொட்டியின் அவலநிலையை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து போர்கால நடவடிக்கையாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் உத்தரவின் பேரில்,  ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் மேற்பார்வையில் பொதுமக்களை கடந்த 5 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டது.

மக்களை, சிறுவர்களை அச்சுறுத்தி வந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி அகற்றப்பட்டதை தொடர்ந்து ஈகுவார்பாளையம் பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com