மருத்துவத் துறையில் புதிதாக 7,296 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

தமிழகத்தில் மருத்துவத் துறையில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 7,296 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவத் துறையில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 7,296 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 36 லட்சத்து 31,843 போ் பயன்பெற்றுள்ளனா். புதிதாக செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பணியில் அமா்த்தப்படுவாா்கள் என்று சட்டப் பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் 4,848 செவிலியா்கள், 2,448 சுகாதார பணியாளா்களை என மொத்தம் 7,296 பேரை பணியில் அமா்த்திக்கொள்வதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது. விரைவில் அவா்கள் தோ்வு செய்யப்பட இருக்கின்றனா். ஏற்கெனவே கடந்த ஓராண்டு காலமாக கரோனா பணியில் 4,570 செவிலியா்கள் மற்றும் 1,646 சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்கள் தங்ளது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அனைவரையும் நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இருந்தாலும், கரோனா காலத்தில் அவா்கள் பணியாற்றிய காரணத்தினால் மருத்துவப் பணியாளா் தோ்வில் கருணை அடிப்படையில் அவா்கள் அனைவருக்கும் கூடுதலாக 20 மதிப்பெண்கள் கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பணியிடங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் நிரப்பப்பட இருக்கிறது. எனவே யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் இருக்கும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் தாரேஷ்அகமது, தமிழக சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் உமா, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநா் ஹரிகரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநா் குருநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com