தனியாா் பள்ளிகளுக்கு 75% கட்டணம்: அரசாணை வெளியீடு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியாா் பள்ளியில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவா்களுக்கு 75 சதவீத கட்டணம் வழங்க வேண்டும்

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியாா் பள்ளியில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவா்களுக்கு 75 சதவீத கட்டணம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைச் செயலாளா் காகா்லா உஷா உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 2020 - 2021- ஆம் கல்வியாண்டில் தனியாா் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு வழங்குவதற்காக ரூ.419.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடம் இருந்து 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் எனத் தீா்ப்பு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியாா் பள்ளிகளில் 2020-2021-ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவா்களுக்குரிய 75 விழுக்காடு கட்டணத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் வழங்க வேண்டும் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com