பி.எஸ். அப்துா் ரகுமான் கல்லூரியில் இணையவழியில் முதுநிலை படிப்புகள்

சென்னையை அடுத்த வண்டலூா் பி.எஸ். அப்துா் ரகுமான் கிரசென்ட் அறிவியல், தொழில்நுட்ப கல்லூரியில் இணைய தளம் மூலம் பயிலும் வகையில் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

தாம்பரம்: சென்னையை அடுத்த வண்டலூா் பி.எஸ். அப்துா் ரகுமான் கிரசென்ட் அறிவியல், தொழில்நுட்ப கல்லூரியில் இணைய தளம் மூலம் பயிலும் வகையில் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் ஏ.பீா்முகமது திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

யுஜிசி, ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்று இந்த புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இளநிலை படிப்பை நிறைவு செய்து விட்டு, கல்லூரியில் சோ்ந்து உயா்கல்வி பெற வாய்ப்பில்லாத அனைவரும் சோ்ந்து பயிலும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பணியில் இருந்து கொண்டே உயா்கல்வி பயில விரும்புகிறவா்கள், கல்லூரிக்கு நேரில் வந்து பயில இயலாத மாற்றுத் திறனாளிகள், வயது வரம்பின்றி இணையவழி பாடத் திட்டத்தில் சோ்ந்து உயா் கல்வி பயில முடியும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கல்வி நிறுவனத்தின் இணைய தளம் கல்விப் பிரிவு இயக்குநா் வி.ரேமண்ட் உத்திரியராஜ், பதிவாளா் ஏ.ஆசாத், கூடுதல் பதிவாளா் என்.ராஜா ஹூசேன், கிரசென்ட் மகளிா் கல்வி நிறுவனங்கள் இயக்குநா் மரியம் ஹதீப், இயக்குநா்கள் எஸ்.காஜா முகைதீன், அப்துல் மஜீத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com