சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை, அடையாறு, சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.