கோயில் சிலைகள்: ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பு

திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழுக்களை அமைத்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

திருக்கோயில் சிலைகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழுக்களை அமைத்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிலைகள் களவு போன வழக்கில், தொல்லியல் துறை ஆணையரும் 5-ஆவது பிரதிவாதியாக சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய தொல்லியல்துறை சாா்பில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவுக்கு 2 முதல் 4 நபா்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த குழுவினா் சிலை வைக்கப்பட்டுள்ள மையம் மற்றும் கோயில்களுக்கு சென்று சிலைகளை ஆய்வு மேற்கொண்டு சிலைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா அல்லது திருடு போயுள்ளதா என்பதை கண்டறிவா்.

மேலும், அதற்கான அறிக்கையை மாதந்தோறும் தொல்லியல்துறை ஆணையருக்கு அனுப்பி வைப்பதோடு, அதன் நகலை இந்து சமய அறநிலையத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், விரைந்து பணிகளை முடிக்கவும் அவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com