உள்ளாட்சித் தேர்தல்: முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மாலை 6 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 755 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 12,252 பதவிக்கும் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் வாக்களிக்கும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது. அதன் பிறகு வந்தவர்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வரிசையில் நிற்கவைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

மொத்தம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பணி:

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

17,130 காவலர்கள், 3,405 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 20 ஆயிரத்து 535 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com