சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.15 உயர்வு!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.15 உயர்த்தியுள்து எண்ணெய் நிறுவனங்கள். விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.915.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.15 உயர்வு!


சென்னை: வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை மேலும் ரூ.15 உயர்த்தியுள்து எண்ணெய் நிறுவனங்கள். விலை உயர்வை அடுத்து சென்னையில் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.915.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்ந்து வருவது இல்லதரசிகளிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா விலையை அடிப்படையாக வைத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் ரூ.700 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை ரூ.25, 50 என உயர்ந்து ரூ.825 ஆக விற்பனையாகி வந்தது. 

செப்டம்பர் மாதம் சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு, ஒரு உருளை ரூ.900.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று புதன்கிழமை(அக்.6) ஒரு சமையல் எரிவாயு உருளை மேலும் ரூ. 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டர் ரூ.915.50க்கு விற்பனையாகிறது. அதே நேரம், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலை ரூ.36.50 உயா்ந்து, ரூ.1867.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களில் நான்காவது முறையாக விலை உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் எரிவாயு உருளையின் விலை ரூ.300 அதிகரித்துள்ளது. 

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு எரிவாயு உருளை விலை ரூ.710 ஆக இருந்தது. பிறகு பிப்ரவரி மாதத்தில் மட்டும் மூன்று முறை விலை உயர்த்தப்பட்டு ரூ.710 ஆக இருந்தது. மார்ச் மாதம் ரூ.835 ஆகவும், ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களில் ரூ.825 ஆகவும், ஜூலை மாதம் ரூ.850.50 ஆகவும், ஆகஸ்ட் மாதம் ரூ.875.50 ஆகவும், செப்டம்பர் மாதம் ரூ.900.50 ஆகவும் இருந்தது.

கடந்த ஓராண்டில் எரிவாயு உருளை மீதான விலையேற்றம் இது எட்டாவது முறையாகும். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மட்டும் ஒரே ஒரு முறை எரிவாயு விலை ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. 

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை தொடா்ந்து உயா்த்தப்படுவதால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com