காவிரிக் கரைகளில் தடை: அம்மா மண்டபம் வெறிச்சோடியது!

காவிரிக் கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் மகாளய அமாவாசையாக இருந்தாலும் புதன்கிழமை அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்ட காவிரிக்கரை.
கரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்ட காவிரிக்கரை.

திருச்சி : காவிரிக் கரையில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் மகாளய அமாவாசையாக இருந்தாலும் புதன்கிழமை அம்மா மண்டபம் வெறிச்சோடி காணப்பட்டது.

திருச்சி, ஸ்ரீரங்கம், காவிரிக்கரையில் அமைந்துள்ளது அம்மா மண்டபம். இங்கு, பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில், பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். குறிப்பாக தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் காலை முதல் பிற்பகல் வரை ஆயிரக்கணக்கானோர், இங்கு வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். தமிழகம், கர்நாடகம்,புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருவர்.

கரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்ட காவிரிக்கரை அம்மா மண்டபம்.

புதன்கிழமை மகாளய அமாவாசை. ஆனால், கரோனா பரவுவதை தடுக்கும் விதமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால், காவிரிக்கரை அம்மா மண்டபத்துக்கு திதி கொடுக்க பொதுமக்கள் வரக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம், காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி வருவோரை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பப்படுவர் என எச்சரிக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் வருகையின்றி  வெறிச்சோடி காணப்பட்ட காவிரிக்கரை அம்மா மண்டபம்.

இதனால், புதன்கிழமை காலை பொதுமக்கள் யாருமின்றி அம்மா மண்டபம் வெறிச் சோடிக் காணப்பட்டது. வெளியூர்களில் வந்த ஒரு சிலரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். காவிரிக்கரைகளிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட பொதுமக்கள் கூடுவதை தடுத்து நிறுத்தினர். 

இருப்பினும், காவிரக் கரையில் போலீஸார் இல்லாத பகுதிகளில் ஒரு சிலர் தர்ப்பணம் கொடுத்து, காவிரியில் குளித்து முன்னோர்களை வழிபட்டுச் சென்றனர். 

கரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்ட காவிரிக்கரை.

வழக்கமாக மகாளய அமாவாசை என்றால் காவிரிக் கரையின் இருபுறமும் உள்ள படித்துறைகள், அம்மா மண்டபம், அய்யாளம்மன் மண்டபம், கீதாபுரம், கம்பரசம்பேட்டை, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். கரோனா தடையால் பொதுமக்கள் வருகையின்றி அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com