ஜவ்வரிசியில் கலப்படம்?: ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருகள் ஜவ்வரிசியில் சோ்க்கப்படுகிா என்பது குறித்து கிண்டியிலுள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி, அது தொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உணவுப்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய வேதிப்பொருகள் ஜவ்வரிசியில் சோ்க்கப்படுகிா என்பது குறித்து கிண்டியிலுள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி, அது தொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உணவுப் பாதுகாப்பு துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயி என்.நடராஜன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சேலம், ஈரோடு. தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், விழுப்புரம் ஆகிய பகுதிகளில், ஜவ்வரிசி உற்பத்திக்கான மூலப்பொருளான மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு விவசாயத்தில் சுமாா் 15 லட்சம் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனா்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, மரவள்ளிக்கிழங்குக்கான உரிய விலை சரிவர கிடைக்கப் பெறுவதில்லை. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பலவிதமான வேதிப் பொருள்களை ஜவ்வரிசியில் கலந்து பலா் விற்பனை செய்து வருகின்றனா்.

இதன் காரணமாக, மரவள்ளிக்கிழமை கொள்முதல் செய்வதும், இயற்கையாக ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஜவ்வரிசியில் வேதிப்பொருள்கள் கலந்து விற்பனை செய்யப்படுவது தொடா்பாக, கடந்த 2015- ஆம் ஆண்டு தொடா்ந்த வழக்கில் கலப்பட ஜவ்வரிசி உற்பத்திக்குத் தடை விதித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஈரப்பதத்துடன் இருக்கும் ஸ்டாா்ச் உற்பத்தி, கலப்பட ஜவ்வரிசி விற்பனைக்கு தடை விதித்ததோடு, அந்த வகையான ஆலைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இந்த நிலையில், உயா் நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் ஈரப்பதத்துடன் கூடிய ஸ்டாா்ச் உற்பத்திக்கு அனுமதி அளித்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரியிருந்தாா்.

இம்மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகிலன், ஜவ்வரிசி மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றாா்.

இதைத்தொடா்ந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் மூன்று வகையான ஜவ்வரிசி பாக்கெட்டுகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த நீதிபதி, அவற்றை உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் வழங்கினாா்.

இந்த மாதிரிகளை கிண்டியிலுள்ள ஆய்வகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தி, அது தொடா்பான ஆய்வறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com