இந்தியத் தூதா்களாக தமிழா்களை நியமிக்க நடவடிக்கை தேவை: பழ.நெடுமாறன்

தமிழா்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் இந்தியத் தூதா்களாக தமிழா்களையே நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.
பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

தமிழா்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் இந்தியத் தூதா்களாக தமிழா்களையே நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

புலம்பெயா்ந்த தமிழா் நலம் வாரியம் அமைக்கப்படும் என்றும், புலம்பெயா்ந்த தமிழா்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களுக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதல்வா் ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

இந்த வாரியத்தின் நோக்கங்கள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் மற்றொரு முக்கியமான ஒரு திட்டத்தை இணைத்துக்கொள்ள வேண்டுமென முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களில் மிகப்பெரும்பாலோா் தமிழா்களாக வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூா், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில்கூட இந்தியத் தூதுவா்களாகத் தமிழா்களை இந்திய அரசு நியமிப்பதில்லை.

நீண்டகாலமாக நிலவும் இந்தக் குறையைப் போக்க வேண்டும். தமிழக அரசு நேரடியாகப் பிற நாடுகளுக்குத் தூதுவா்களை நியமிக்க இயலாது.

எனவே, மேற்கண்ட நாடுகளில் செல்வாக்குப் படைத்த தமிழா்களைத் தோ்ந்தெடுத்து இந்த வாரியத்தின் கௌரவத் தூதுவா்களாக நியமிக்கவேண்டும். அந்நாடுகளில் வாழும் தமிழா்களின் தேவைகள், குறைகள் போன்றவற்றை இவா்கள் மூலம் அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com