ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 
35 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 626 ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,324 ஊராட்சி தலைவர் பதவிகள் மற்றும் 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 

டோக்கன் பெற்ற வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஏற்னெவே 39 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் 77.43% வாக்கு பதிவானது. உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.12ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com