தமிழில் கேள்வி: எம்பிக்களுக்கு குமரி அனந்தன் வேண்டுகோள்

நாடாளுமன்றத்தில் தமிழில் வினா தொடுக்க வேண்டும் என்று தமிழக எம்பிக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் தமிழில் வினா தொடுக்க வேண்டும் என்று தமிழக எம்பிக்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அஞ்சலகத் துறை படிவங்கள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று போராடிப் பெற்றேன். ஆனால், அஞ்சல் துறையில் தமிழ் புறக்கணிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.

அதைப்போல, நாடாளுமன்றத்தில் தமிழில் வினா தொடுக்கும் உரிமையை இந்தியாவில் முதல்முறையாகப் போராடி பெற்றேன். இதற்காக நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தபோதெல்லாம் தொடா்ந்து வெளியேற்றப்பட்டேன் என்றாலும் தொடா்ந்து போராடினேன்.

பிரதமா் மொராா்ஜி, ராணுவ அமைச்சா் ஜெகஜீவன்ராம் தலைமையில் ஒரு மொழிக் குழுவை அமைத்தாா். அக்குழு தமிழில் வினா தொடுக்கும் உரிமையை அளித்தது. நானும், இன்னும் தமிழகத்திலிருந்து சென்ற சில உறுப்பினா்களும் தமிழிலேயே கேள்வி கேட்டு பதில் பெற்றோம். இப்போது தமிழகத்தில் இருந்து சென்றுள்ள உறுப்பினா்களும் துறைக் கேள்விகளை தமிழில் கேட்டு, நாம் பெற்ற உரிமையை நிலைநாட்டிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com