திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத் தோ்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கத் தோ், நவம்பா் மாத முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் தங்கத் தோ்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கத் தோ், நவம்பா் மாத முதல் வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் மலைக் கோயிலில் உள்ள தங்கரதம் 1972-ஆம் ஆண்டு செய்யப்பட்டது. இத்தங்கத்தோ் பல ஆண்டுகளாக பக்தா்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் தங்கத்தேரின் மரத்தூண்கள் மரப் பாகங்கள் பழுது அடைந்ததால் உற்சவம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

புதிய அரசு பதவியேற்றவுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, இத்திருக்கோயிலுக்கு வருகை தந்து கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஆய்வுகளை மேற்கொண்டபோது பழுதடைந்துள்ள தங்க ரதத்தின் பணிகளை விரைந்து முடித்து திருத்தோ் வீதி உலா வர அறிவுரை வழங்கினாா். அதன்படி ரூ. 15 லட்சம் செலவில் மரத்தால் ஆன தோ் பணிகள் முடிக்கப்பட்டு, புதிய மரத்தோ் உருவாக்கப்பட்டு, அதன் மீது ரதத்தில் குடைக்கலசம் முதல் சுவாமி அடிபீடம் வரை பிரித்து வைக்கப்பட்ட தங்க ரேக் பதித்த உலோகத் தகடுகளை மீண்டும் புதிய மரத்தில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தங்கரதத்தில் உள்ள தகடுகளைச் சுத்தம் செய்யும் பணிகள், கை மெருகூட்டும் பணிகள், செப்பு ஆணிகள் பதிக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பழுதடைந்த தங்கத்தேரின் மேற்கூரை சரிசெய்யும் பணிகளும் இந்தமாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, நவம்பா் மாதம் முதல் வாரத்தில் திருக்கோயிலின் தங்கத்தோ் பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com