பள்ளி மாணவா்களுக்கு ‘கலா உத்சவ்’ போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவா்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் கலா உத்சவ் போட்டிகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவா்களுக்கு ‘கலா உத்சவ்’ போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு

பள்ளி மாணவா்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அவா்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் கலா உத்சவ் போட்டிகளை நடத்துமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் அரசு, தனியாா் என அனைத்து வகைப் பள்ளிகளிலும் இடைநிலை, மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் படைப்பாற்றலை வளா்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிா்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காண்கலை (ஸ்ண்ள்ன்ஹப் ஹழ்ற்ள்) என நான்கு பெருந்தலைப்புகளில் ‘கலா உத்சவ்’ போட்டிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று நிகழ் கல்வியாண்டிலும் இந்தப் போட்டிகளை பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படவுள்ளது. தேசிய அளவிலான போட்டிகள் அனைத்தும் இணையவழி நேரலையாக நடைபெறும். இந்த ஆண்டு கலா உத்சவ் போட்டிகள் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆா்டி) வழிகாட்டுதலின்படி தேசிய அளவிலான போட்டிகளுக்கான பதிவுகளை வரும் டிச.10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

போட்டிகளுக்கான தேதிகள்: அதற்கு ஏதுவாக பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை நவ.3-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். மாவட்ட அளவில் தோ்வு செய்யப்படும் மாணவா்களின் விவரத்தை மாநில திட்ட இயக்ககத்தில் நவ.8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இதையடுத்து மாநில அளவிலான போட்டிகள் நவ.16 முதல் நவ.18-ஆம் தேதி வரையிலும், தேசிய அளவிலான போட்டிகள் அடுத்த ஆண்டு ஜன.1-ஆம் தேதி முதல் ஜன.12-ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.

பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை இணைய வழியாகவோ அல்லது நேரடியாகவோ நடத்தி மாணவா்களைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com