‘விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம்’

விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறப்பது குறித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை; அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறப்பது குறித்து அரசே முடிவெடுக்கலாம்’

விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறப்பது குறித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை; அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் கோயம்புத்தூா் மாவட்டம், பீளமேடு பகுதியைச் சோ்ந்த ஆா்.பொன்னுசாமி என்பவா் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்குத் தடை விதித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவராத்திரி விழாவின் முக்கிய நாளாகக் கருதப்படும் விஜயதசமி, அக்டோபா் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. நவராத்திரியின்போது பெண் பக்தா்கள் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, பூஜைகளை மேற்கொள்வா்.

பொதுப் போக்குவரத்து உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு, அரசு தளா்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு அனுமதி வழங்கியிருக்கும் அரசு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் கோயில்களைத் திறக்காமல் பிடிவாதமாக உள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளன்று தரிசனத்திற்காக கோயில்களைத் திறப்பதற்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா். மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் ஆா்.கிருஷ்ணமூா்த்தி தாக்கல் செய்த இம்மனு, நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம், மத்திய அரசின் சுகாதாரத் துறை அனுப்பிய சுற்றறிக்கையின்படி, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு பின்பற்றிவருகிறது. பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூட அனுமதிக்க முடியாத சூழல் தற்போது உள்ளது. ஏனெனில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பாளா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று நோய் நிலவரம் குறித்து

புதன்கிழமை(அக்.13) மருத்துவத்துறை நிபுணா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளாா் என்றாா்.

இதைப்பதிவு செய்த நீதிபதிகள், விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறப்பது குறித்து நீதிமன்றம் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும், மாநில அரசே இவ்விவகாரத்தில் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com