பண்டிகை: நியாய விலைக் கடைகளில் பொருள்களை இருப்பு வைக்க அறிவுறுத்தல்

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால், நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பொருள்களை இருப்பு வைக்க வேண்டுமென உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தினார்.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால், நியாய விலைக் கடைகளில் முன்கூட்டியே பொருள்களை இருப்பு வைக்க வேண்டுமென உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தினார்.
 சட்டப் பேரவையில் உணவுத் துறையின் சார்பாக அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் மீது எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள், கிடங்குகளில் உள்ள பொது விநியோகப் பொருள்கள் இருப்பு மற்றும் அதனை பண்டிகைக் காலங்களில் முன்கூட்டியே நியாயவிலை கடைகளுக்கு அனுப்புதல் மற்றும் துறையின் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் சக்கரபாணி தலைமையில்
 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் முறையில் நடைமுறை மாற்றங்களைச் செய்து, விவசாயிகளின் சிரமங்களைக் குறைக்க வேண்டும். மேலும், நெல் கொள்முதலில் ஈரப்பத அளவில் சலுகை உயர்வு பெறுவதற்கு மத்திய அரசிடம் தொடர் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
 மேலும், பயோ-டீசல் என்ற பெயரில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்யப்படுவதையும், டீசல் மற்றும் பெட்ரோலில் கலப்படம் செய்வோர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com