கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு விரைவில் ஊக்கத் தொகை

தமிழகத்தில் கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று
கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு விரைவில் ஊக்கத் தொகை

தமிழகத்தில் கரோனா பேரிடா் காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை விரைவில் வழங்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 90 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பின் கவனிப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதனை புதன்கிழமை திறந்துவைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1.5. கிலோ எடைக்கும் குறைவாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் சிறப்பு பச்சிளம் குழந்தைகள் பின் கவனிப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறுவா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 93 சதவீதம் பேருக்கும், 2 ஆம் தவணை தடுப்பூசி 37 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியதில் மாநிலத்திலே கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

கரோனா நோய்த் தொற்று காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் விரைவில் தொடங்கிவைப்பாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, திமுக கோவை மாநகா் கிழக்கு மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com