செங்கல் சேம்பர் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு கையேடு வெளியீடு!

செங்கல் சேம்பர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு, திட்டங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கையேட்டினை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
செங்கல் சேம்பர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு, சட்ட விதிமுறைகள் தொடர்பான கையேட்டினை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.
செங்கல் சேம்பர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு, சட்ட விதிமுறைகள் தொடர்பான கையேட்டினை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.


திருவள்ளூர்: செங்கல் சேம்பர் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு, திட்டங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கையேட்டினை ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.

செங்கல் சேம்பர் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அரசு செயல்படுத்தும் சமூக பாதுகாப்பு திட்டங்கள், குழந்தைகள், பெண்கள், தொழிலாளர்கள் நலன் குறித்த சட்டங்களும் உள்ளது. இது தொடர்பாக தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் தனியார் அறக்கட்டளையும் இணைந்து விழிப்புணர்வு கையேடு புத்தக வடிவில் தயார் செய்து வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை விழிப்புணர்வு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்து தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு கையேடு புத்தகத்தை வெளியிட்டு பேசியது. திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த சூளைகளில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்ப, குடும்பமாக தங்கி வேலை செய்து வருகின்றனர். ஆனால், செங்கள் சூளைத்தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து தொழிலாளர்கள் நலத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கையேடு தொழிலாளர்களுக்கு உபயோகமாக இருக்கும். இதற்காக விழிப்புணர்வு கையேடானது செங்கல் சூளை உரிமையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு உபயோகமாக இருக்கும். 

இந்த புத்தகத்தை பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக பாதுகாப்பு திட்டங்களை பெற்று பயனடையச் செய்வதே நோக்கமாகும். 

மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர், தன்னார்வலர்கள் ஆகியோருக்கும் வழங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன நிர்வாக செயலாளர் ஸ்டீபன், கள ஒருங்கிணைப்பாளர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com