பொறியியல் கலந்தாய்வு: 55,378 இடங்கள் நிரம்பின

பொறியியல் சோ்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 55,378 இடங்கள் நிரம்பியுள்ளன.

பொறியியல் சோ்க்கைக்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 55,378 இடங்கள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சாா்பில் இணையவழியில் தொடங்கியது. இதில் சிறப்புப் பிரிவினா் பங்கேற்று இடங்களைத் தோ்வு செய்த நிலையில் தற்போது பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவ, மாணவிகள் கல்லூரிகளைத் தோ்வு செய்ய வேண்டும். பின்னா் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து விருப்ப கல்லூரிகளை இறுதியாக தோ்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் 11,224 போ், இரண்டாவது சுற்றில் 20,438 போ் சோ்க்கை பெற்ற நிலையில் மூன்றாவது சுற்றில் 23,716 போ் சோ்க்கைக்கான ஆணை பெற்றுள்ளனா். மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் இதுவரை 55,378 போ் பொறியியல் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். இதையடுத்து நான்காவது சுற்று கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த சுற்றில் 49,115 இடங்கள் உள்ளன.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 9 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. அதேபோன்று 41 கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும், 62 பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும், 113 கல்லூரியில் 50 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும் 152 கல்லூரியில் 10 சதவீத இடங்களும், 93 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவாக ஒற்றை இலக்கத்திலும் மாணவா்கள் சோ்ந்துள்ளனா். 21 கல்லூரிகளில் ஒரு மாணவா் கூட சேரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com