தமிழகத்தின் தியாக தீபங்கள் - 67: பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை

சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் 1885-இல் பிறந்தவர் நாகம்மாள். பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மாள் திருமணம் 1898-இல் நடைபெற்றது. கல்வி இல்லையெனினும்  ஆளுமையுடன் விளங்கியவர் நாகம்மை.
தமிழகத்தின் தியாக தீபங்கள் - 67: பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மை

சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் 1885-இல் பிறந்தவர் நாகம்மாள். பெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மாள் திருமணம் 1898-இல் நடைபெற்றது. கல்வி இல்லையெனினும்  ஆளுமையுடன் விளங்கியவர் நாகம்மை.

"பெரியார் ஈ.வெ.ரா. ஒத்துழையாமை இயக்கத்தில் அதிதீவிரமாக ஈடுபட்டார். அன்னையாரும் தமது சுகவாழ்வைத் துறந்தார். விலையுயர்ந்த நகைகளைத் துறந்தார். மெல்லிய பட்டாடைகளை வெறுத்தார். முரட்டுக் கதராடை அணிந்தார்.  தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்டியாக முன்வந்தார்.

அன்னையார் முன்னிலையில் நின்று போராடினார். இதனால் அநேகப் பெண்கள் தைரியமாக இப்போரில் கலந்துகொள்ள முன்வந்தனர் ' என்று எஸ்.சி.சிவகாமியம்மையார் 1935 பகுத்தறிவு இதழில் பதிவு செய்துள்ளார்.

1924-இல் பெரியார் ஈ.வெ.ரா. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளரானார். கள்ளுக்கடை மறியலை அறிவித்திருந்தார் காந்தியடிகள்.

ஈரோட்டில் பெரியார் ஈ.வெ.ரா. இல்லத்தில் காந்தியடிகளும் காங்கிரஸ் தலைவர்களும் மதுவிலக்குக் கொள்கை குறித்துப்பேசி கள்ளுக்கடை முன்பு மறியல் போராட்டம் நடத்தத் தீர்மானித்தனர்.

1921 நவம்பரில் பெரியார் ஈ.வெ.ரா.-வும் அவருடன் நூறு தொண்டர்களும் ஈரோட்டில் தடையை மீறி போராட்டத்தில் இறங்கினர். ஒரு மாத சிறைத் தண்டனை பெற்றனர். இச்சூழலில் பெரியார் ஈ.வெ.ரா.வின் மனைவி நாகம்மையும், தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாவும் பெண்களைத் திரட்டி மறியல் போராட்டத்தில் இறங்கினர். 

"நாகம்மையாரும் அவருடன் சென்ற தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டால் ஈரோட்டின் நிலைமை மிக மோசமாகி 10,000 பேர் சிறை செல்வார்களென்று அதிகாரிகள் கருதி சென்னை அரசாங்கத்திற்குத் தந்தி கொடுத்து முன்னறிவிப்புடன் தடையுத்தரவை நீக்கினர். இச்சம்பவத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்து விட்டது ' என்று சாமி.சிதம்பரனார் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியடிகள் 1921 டிசம்பர் 28-ஆம் தேதிய " யங் இந்தியா' இதழில் "மதுவிலக்கில் ஈரோடு மட்டும் அஞ்சாது பணியாற்றி வந்திருக்கிறது. இப்போது நாயக்கரின் மனைவியாரும், அவருடைய சகோதரியும் மறியல் செய்கிறார்கள்' என்று பதிவிட்டிருந்தார்.

1922 ஜனவரி 19-இல் பம்பாயில் நடைபெற்ற சர்வ கட்சிக் கூட்டத்தில் சர் சங்கரன் நாயரும், பண்டிட் மாளவியாவும் "கள்ளுக்கடை  மறியலை நிறுத்திவிட்டு நடவடிக்கைகளைத் தொடங்கலாம்' என்று காந்தியடிகளிடம் தெரிவித்தபோது, " மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது '  என்று பதிலளித்துள்ளார்.

1924-இல் நடைபெற்ற வைக்கம் கோயில் தெரு நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்று பெரியார் ஈ.வெ.ரா. கைதாகி சிறைசென்ற பின்னர் நாகம்மையார் களமிறங்கினார்.

அம்மையார் மாநில காங்கிரஸ் உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஏராளமான மேடைகளில் சொற்பொழிவாற்றியுள்ளார்.  

1925-இல் காங்கிரûஸ விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் பெரியார் ஈ.வெ.ரா. நாகம்மையாரும் பெரியாருடன் வெளியேறி இறுதி மூச்சுவரை சுயமரியாதைச் சுடராகப் பிரகாசித்தார். 11.05.1933-இல் நாகம்மையார் மறைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com