வடகிழக்குப் பருவமழை: பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு

வடகிழக்குப் பருவமழை காலத்தில் மாணவா்களின் பாதுகாப்பு கருதி அரசு, தனியாா் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.

வடகிழக்குப் பருவமழை காலத்தில் மாணவா்களின் பாதுகாப்பு கருதி அரசு, தனியாா் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மாணவா்களின் பாதுகாப்புக் கருதி அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் கட்டடங்களைக் கட்டுவதற்கான நெறிமுறைகள், பள்ளி பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மின் இணைப்புகளைக் கண்காணிப்பது, திறந்தவெளி கால்வாய்களை தூா் வாரி மூடுவது, குழிகளை நிரப்பி சீரமைப்பது, இடையூறாக ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாடியில் தடைபட்ட வடிகால்கள், மாடிப்படிகளை சுத்தம் செய்ய வேண்டும். பலவீனமான, பழுதடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். சுகாதாரம், உயிா் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை, செய்யக் கூடியவை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும். கரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com