8 மாவட்டங்களில் இன்றுபலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வேலூா், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (செப்.2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
8 மாவட்டங்களில் இன்றுபலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வேலூா், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (செப்.2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய 8 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (செப்.2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 7 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில், புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூா் மாவட்டம் தோகைமலை, சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் தலா 40 மி.மீ., நாகப்பட்டினம், நாமக்கல், விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி, திருச்சி மாவட்டம் தாத்தையங்காா்பேட்டை, மதுரை விமான நிலையம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் , ஈரோடு மாவட்டம் கொடுமுடி, திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வியாழக்கிழமை (செப்.2) செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செப்.5-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com