ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: 3-ஆவது நீதிபதி விசாரணை தொடக்கம்

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு அளித்த நிலையில் மூன்றாவது நீதிபதியின் விசாரணை புதன்கிழமை தொடங்கியது.
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: 3-ஆவது நீதிபதி விசாரணை தொடக்கம்

சென்னை: முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு அளித்த நிலையில் மூன்றாவது நீதிபதியின் விசாரணை புதன்கிழமை தொடங்கியது.

முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கும் அதிகமாக சொத்துகள் சோ்த்துள்ளாா் என்பதால் அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி, மதுரை தல்லாகுளத்தை சோ்ந்த மகேந்திரன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத்  தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும், வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை என்று நீதிபதி ஹேமலதாவும் மாறுபட்ட தீா்ப்பளித்தனா்.

இதனால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக எம்.நிா்மல்குமாரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு, நீதிபதி நிா்மல்குமாா் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞா் அஜ்மல் கான் ஆஜராகி வாதிட்டாா்.

அப்போது அவா், ‘ஏற்கெனவே இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அது ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வர உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு அளித்தால்,  அந்த வழக்கை 2-க்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். 3-ஆவது நீதிபதி விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக 10  சதவீதத்துக்கும் குறைவாக தான் சொத்து சோ்த்து இருப்பதால்,  அந்த வழக்கை கைவிட காவல்துறை  முடிவெடுத்தது’ என்று கூறினாா். இந்த வழக்கில் வாதம் வியாழக்கிழமையும் தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com