முதல்வரின் தனிப்பிரிவுக்கு இணையத்தில் மனுக்கள் அளிக்கலாம்

முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுக்கள் அளிப்போா் இணையதளம் வாயிலாக அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுக்கள் அளிப்போா் இணையதளம் வாயிலாக அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெறுவதோடு மட்டுமின்றி, தபால், இணையதளம் மற்றும் முதலமைச்சா் உதவி மையம் (ஸ்ரீம்ட்ங்ப்ல்ப்ண்ய்ங்.ற்ய்ங்ஞ்ஹ.ா்ழ்ஞ்) ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அவ்வாறு இணைய வழியாக பெறப்படும் மனுக்களுக்கான ஒப்புகை சம்பந்தப்பட்டவரின் செல்லிடப்பேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பப்படுகிறது.

கோரிக்கை (அல்லது) மனு எண் மூலமாகவே தங்கள் கோரிக்கை நிலை குறித்து, இணைய வழியாக தெரிந்து கொள்ளலாம். பொதுமக்களிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணைய வழியாகவோ, எவ்வழியில் பெறப்பட்டாலும், முதலமைச்சரின் தனிப்பிரிவில் அனைத்து மனுக்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.

ஆகையால், கரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் கூடுவதைத் தவிா்த்து, இணையவழி சேவைகளைப் பயன்படுத்தி மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com