பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவிகளுக்கு கரோனா பரவவில்லை: மா. சுப்பிரமணியன்

ஏற்கெனவே அவர்களுக்கு தொற்று இருந்து இருக்கிறது. பள்ளிகளுக்கு வந்தவுடன் துறையின் அலுவலர்களால் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று விளக்கம்  அளித்துள்ளார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

பள்ளி மாணவிகள் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறித்துப் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் தொற்று பரவியிருக்கிறது என்ற தவறான தகவல் பரவியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அவர்களுக்கு தொற்று பரவிவிடவில்லை. ஏற்கெனவே அவர்களுக்கு தொற்று இருந்து இருக்கிறது. பள்ளிகளுக்கு வந்தவுடன் துறையின் அலுவலர்களால் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று விளக்கம்  அளித்துள்ளார்.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை கிண்டி மடுவின்கரையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார நிகழ்வினை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நேரத்தில் குளங்களைத் தூர்வாரி, மழைநீர் சேமிப்புத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்ட ராமர் கோயில் குளத்தைத் தூர்வாரி அத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அத்திட்டத்தின்படி தமிழகத்தில் இருக்கிற அனைத்து ஏரிகள், குளங்கள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் செய்திட அறிவுறுத்தி ஏறத்தாழ 3 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் தி.மு.க.வால் தூர்வாரி மேம்படுத்தப்பட்டது. 

நகராட்சி நிர்வாகத்தால், குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அனைத்து மண்டலங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்த மண்டலத்திலும் சைதாப்பேட்டை மடுவின்கடியில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி மாநகராட்சி ஊழியர்கள் வீடுகள் தோறும் சென்று விழிப்புணர்வை ஏ ற் படுத்துவது, மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்குவது, தனித்தனியே இருக்கிற வீடுகளிலும் மழைநீர் திட்டத்தைத் தீவிரப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு சொந்தமாக இருக்கிற 600 குளங்கள் ரூ.460 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி மேம்படுத்தப்படவிருக்கிறது. சென்னையில் இருக்கிற 25 நீர்நிலைகளும் ரூ.200 கோடி மதிப்பில் தூர்வாரி மேம்படுத்தப்படவிருக்கிறது. இதற்கான அறிவிப்புகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அண்மையிலே அறிவித்திருக்கிறார்கள். இது சென்னை மாநகரில் வசிக்கும் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தருகிற செய்தியாகும். சென்னையைப் பொறுத்தவரை 10 லட்சத்து 94 ஆயிரம் குடியிருப்புகள் இருக்கிறது. அதில் 8 லட்சத்து 24 ஆயிரம் குடியிருப்புகளுக்கு தனித்தனியே குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தனியே குடிநீர் இணைப்புகள் இருந்தாலும், சென்னையில் குடிநீர் லாரிகள் மூலமும், குடிநீர்த் தொட்டிகள் மூலமும் வழங்கப்படுவதால் மிக குறுகலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. 
ஆகவேதான் முதல்வர் சென்னையில் இருக்கிற 10 லட்சத்து 94 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் தனித்தனியே குடிநீர் இணைப்புகளை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். மீதமிருக்கிற 2 லட்சத்து 70 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் எதிர்வரும் 5 ஆண்டுகளில் தனித்தனியே குடிநீர் இணைப்புகள் வழங்க இருக்கிறார்கள் என்ற ஒரு மகிழ்ச்சியான செய்தியை குடிநீர் கழிவுநீர் அகற்று வாரியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. 

எனவே முதல்வரின் இந்த நடவடிக்கை சென்னை மாநகர மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்று இருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டதால்தான் தொற்று பரவியிருக்கிறது என்ற தவறான தகவல் பரவியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அவர்களுக்கு தொற்று பரவிவிடவில்லை. ஏற்கெனவே அவர்களுக்கு தொற்று இருயது இருக்கிறது. பள்ளிகளுக்கு வந்தவுடன் துறையின் அலுவலர்களால் அத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர் போன்ற 4 மாவட்டங்களில் மூன்று ஆசிரியர்களுக்கும், மூன்று மாணவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எது எப்படி வந்திருந்தாலும், அவை பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரளத்தோடு தொடர்புடைய மாவட்டம் கோவை மாவட்டம், அம்மாவட்டம் மட்டுமல்ல கேரளாவோடு தொடர்புடைய 9 மாவட்டங்களின் எல்லையின் வழியாக தமிழகத்திற்குள் வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி போன்ற தீவிரமான பணிகளை கண்காணித்து வருகிறோம். இருந்தாலும் கூட சைக்கிளில் வருபவர்கள், நடந்து வருபவர்கள் மூலம் தொற்று எப்படியாவது பரவிவிடுகிறது. கேரள மாநிலத்திலும் மிகச்சிறந்த நடவடிக்கைகளை தொற்றுப் பரவாமல் எடுத்து வருகிறார்கள். இருந்தாலும் தொற்றின் வேகம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம், 30 ஆயிரம் இருந்து வருகிறது.

நேற்றைக்கு மத்திய அரசின் சுகாதார துறை அமைச்சரை சந்தித்து கேரளத்தோடு தொடர்புடைய 9 மாவட்டங்களில் 100 சதவிகிதம் அளவுக்கு தடுப்பூசி செலுத்திட வேண்டுமென்று கூடுதலான தடுப்பூசிகளை கேட்டிருக்கிறோம்.

அதற்கு ஒன்றிய அமைச்சரும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். தசை சிதைவு நோயினால் தமிழகம் முழுவதும் 6, 7 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படிப் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தாரிடம் ஒரு தவறான தகவல் பரவியுள்ளது. அமெரிக்காவில் இருந்து ரூ.16 கோடிக்கு மருந்து வாங்கி கொடுத்தால் இந்நோய் குணமாகிவிடும் என்று. அதுபோல் யாரும் மருந்து வாங்கி சாப்பிட்டு குணமடைந்ததாக செய்தி இல்லை. ஆனாலும் சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு என்ன மருந்து கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்து அவர்கள் செயல்படுத்துவார்கள்.

இந்தியாவிலேயே குழயதைகளுக்கு தடுப்பூசிகள் எங்கேயும் செலுத்தப்படவில்லை. நேற்றைக்கு ஒன்றிய சுகாதார துறை அமைச்சரை சந்தித்தபோது கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்கிற மாணவர்கள் 17 முதல் 18 வயதினராக இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தலாமா? 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு செலுத்தும் ஊசியை செலுத்தலாமா? என்று கேட்டோம். அதற்கு அவர் சுகாதார துறையின் அலுவலர்களோடு விவாதித்து தெரிவிப்பதாக அறிவித்திருக்கிறார். 

குறிப்பாக மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகளின்படி தொடங்கப்படும்போது நிச்சயமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமைச்சர்  தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com