கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கி.வேணுவிற்கு கலைஞர் விருது

கும்மிடிப்பூண்டி முன்னாள்கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான கி.வேணுவிற்கு திமுக தலைமை கலைஞர் விருதினை அறிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கி.வேணுவிற்கு கலைஞர் விருது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான கி.வேணுவிற்கு திமுக தலைமை கலைஞர் விருதினை அறிவித்துள்ளது.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 2 முறை சட்டப்பேரவை உறுப்பினராக  இருந்தவர் கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியை சேர்ந்த கி.வேணு. இவர் திமுகவில் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து  வந்தார். 1975 ஆம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியோடு ஓர் ஆண்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கி.வேணு திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். 

இந்நிலையில், திமுக தலைமை கழகம் சார்பில் 2021 ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழாவில் 5 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கி.வேணுவிற்கு கலைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி புரவலர் ஜி.மனோகரன், தொண்டர் அணி அமைப்பாளர் முத்துகுமரன், பொதுக்குழு குழு உறுப்பினர் பகலவன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி, அமலா சரவணன், குருவாட்டுச்சேரி ஊராட்சி தலைவர் கோமதி சேகர், வடிவேல், திருஞானம் உள்ளிட்ட திமுகவினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

வருகின்ற செப்டம்பர் 15-17 ஆம் தேதி வரை திமுக சார்பில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் கும்மிடிப்பூண்டி கி.வேணுவிற்கு கலைஞர் விருதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com