அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை நீட்டிப்பு: முதல்வர்

​தமிழகத்தில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகத்தில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

  • பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தற்போது உள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
  • பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனைத்து நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், மூன்றாம் அலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் பண்டிகைகளைத் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறும் பொதுப் போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்துமாறும் கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
  • தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள நபர்களில் சுமார் 12 சதவிகிதம் நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 45 சதவிகித நபர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • தினந்தோறும் சுமார் மூன்று லட்சம் தடுப்பூசிகள் என்ற அளவில் செலுத்தப்பட்டு வந்தவை, தற்போது சுமார் ஐந்து லட்சமாக அதிகரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


முதல்வர் அறிவிப்பை முழுமையாகப் படிக்க:
இங்கே க்ளிக் செய்யவும்.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com