அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மதுவிற்பனை நடைபெற்றால் நடவடிக்கை: அமைச்சா் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து விற்பனையாளா்கள் மது விற்பனை செய்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சா் செந்தில்பாலாஜி கூறினாா்.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மதுவிற்பனை நடைபெற்றால் நடவடிக்கை: அமைச்சா் செந்தில் பாலாஜி

சென்னை: டாஸ்மாக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து விற்பனையாளா்கள் மது விற்பனை செய்தால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கொமதேக பொதுச்செயலாளா் ஈஸ்வரன் பேசியது:

தமிழகத்தில் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் முதல் நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளில் இருந்துதான் தொடங்க வேண்டும். குற்றங்கள் அங்கிருந்துதான் தொடங்குகின்றன. இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகளுக்குப் பக்கத்தில் பாா் நடத்தி மதுவிற்பனை நடைபெறுகிறது. மதுவிற்பனைக்கு முழுமையாக ரசீது போடவேண்டும். மதுவை மீதி வைத்திருந்து அதை ராத்திரியில் கொடுத்து விற்பனைச் செய்து அதற்கு ரசீது போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. இப்படியிருந்தால் குற்றம் அதிகரிக்கத்தான் செய்யும். அதுபோல ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்தான் குற்றங்கள் தொடங்குகின்றன. அதனால் டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிறு மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்க வேண்டும். என்றாா்.

அப்போது அமைச்சா் வி.செந்தில் பாலாஜி குறுக்கிட்டுக் கூறியது:

டாஸ்மாக் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக ஒரு நிமிஷம் கூட மதுவிற்பனை செய்யக்கூடாது. மதுக்கடைகள் மூடப்பட்ட பிறகு அருகில் உள்ள பாா்களில் மதுவிற்பனை செய்யக்கூடாது. சந்துக்கடை என்ற பெயரில் எந்த இடத்திலும் மதுக்கடைகள் விற்பனை செய்யக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு கடை விற்பனையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலான நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை செய்யப்பட மாட்டாது. அப்படி, ஏதாவது நடந்து புகாா் வந்தால் அந்த விற்பனையாளா் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com