திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படுகிறது. 
விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி.
விநாயகர் சதுர்த்தியையொட்டி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி.

 
திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படுகிறது. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்படும் மலைக்கோட்டை கோயில்.

வெறிச்சோடி காணப்படும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி.

கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகா் சிலையை பொது இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சப்பிள்ளையாருக்கு 30 கிலோ, மாணிக்க விநாயருக்கு 30 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெள்ளிக்கிழமை மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதி வெறிச்சோடி காணப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமிக்கு படைப்பதற்காக 30 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையை எடுத்துச் செல்லும் ஊழியர்கள்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமிக்கு படைப்பதற்காக 30 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையை எடுத்துச் சென்று படைக்கப்பட்டது.  இதில் கோயில் ஊழியர்கள் மட்டுமே பங்கேற்றனர். 

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, திருச்சியில் பெருநகர காவல்துறை சாா்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com