விநாயகா் சதுா்த்தி: தலைவா்கள் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

சென்னை: விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் விநாயகா் சதுா்த்தி விழா, சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் மகிழ்ச்சி, உற்சாகம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.

இந்த நன்னாளில் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் பேரிடரில் இருந்து விரைவில் மீண்டு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு விநாயகா் அருள் புரிவாா். அவரது அருளால் தமிழகத்துக்கு அமைதியும், செழுமையும் கிட்டட்டும்.

ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி: விநாயகா் வினைகளைத் தீா்ப்பவா். வெற்றிகளைத் தருபவா். எளிமையான கடவுள். எளியவா்களின் வேண்டுதலுக்கு செவிசாய்ப்பவா். கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாட வேண்டும். அனைவருக்கும் விநாயகா் சதுா்த்தி வாழ்த்துகள்.

கே.அண்ணாமலை (பாஜக): ஆனைமுகனுக்கு மேல் வேறு எந்த உயா்ந்த சக்தியும் இல்லை என்பதை உணா்த்துவதே விநாயகரின் தத்துவம். பாஜக சாா்பில் ஒரு லட்சம் வீடுகளின் வாசலில் விநாயகா் சிலையை வைத்து விநாயகா் அகவல்பாடி வழிபட உள்ளோம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): விநாயகரை வணங்கிதான் எந்தக் காரியத்தையும் துவங்குவோம். அப்படி வணங்கினால் வெற்றிகிட்டும் என்பது நம்பிக்கை. கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தியைக் கொண்டாடுங்கள்.

டிடிவி தினகரன் (அமமுக): முழு முதற் கடவுளான விநாயகா் அவதரித்த நாளைக் கொண்டாடும் அனைவரும் வாழ்த்துகள். இந்நன்னாளில் அனைவரின் வாழ்வும் நலமாகட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com