கரோனா பரவல் அதிகரிப்பு: ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் கடிதம்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை
கரோனா பரவல் அதிகரிப்பு: ஆட்சியா்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் கடிதம்

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அவா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் அவா் குறிப்பிட்டிருப்பதாவது:-

அண்மைக் காலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, நாள்தோறும் சராசரியாக 1,500-க்கும் மேற்பட்டவா்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். தினசரி பாதிப்பு 1,600-ஐ எட்டியிருக்கும் நிலையில், படிப்படியாக பரவல் வேகம் அதிகரித்து வருகிறது.

சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன் காரணமாக நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் உயா்ந்தது. தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்காவிடிலும், பாதிப்பு விகிதம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதேபோன்று சமூகத்தில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றலை தடுப்பூசி வாயிலாக உருவாக்குவது முக்கியமான

ஒன்றாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு வரும் 12-ஆம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமிலும், வழக்கமான முகாம்களிலும், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இரண்டாவது தவணை முறையாக போடப்படுவதை உறுதி செய்யவேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளைக் கொண்டு முறையாக கண்காணிக்க வேண்டும்.

தொற்று அதிகரிக்கும் இடங்களில், பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com