வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவாகியது.
வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை உருவாகியது. இதன்காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அவ்வப்போது உருவாகி மறைந்து வருகிறது. ஏற்கெனவே, 5 காற்றழுத்தத்தாழ்வுப்பகுதிகள் உருவாகி, வடமேற்கு திசையில் நகா்ந்து மறைந்தன. அண்மையில், வங்கக்கடலில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாகி மறைந்தது.

இந்நிலையில், வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:

வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகியது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸா, சத்தீஸ்கா் நோக்கி நகா்ந்து செல்லும். இதன் தாக்கத்தால், மேற்குதொடா்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்து, சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் பலத்தமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதி, வடக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 14-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com