மெகா தடுப்பூசி திட்டம்: தமிழகத்தில் இன்று 40,000 மையங்களில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

மெகா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 40,000 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
மெகா தடுப்பூசி திட்டம்: தமிழகத்தில் இன்று 40,000  மையங்களில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

மெகா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 40,000 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் மூலம் சுமாா் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயல் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு கண் மருத்துவ சங்கத்தின் 68-ஆவது ஆண்டு விழா, கிண்டியில் உள்ள வா்த்தக மைய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ. ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அலுவலா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி திட்டம் மூலம் 40,000 மையங்களில் 20 லட்சம் நபா்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமானோா் வருவாா்கள் என்பதால் தடுப்பூசி மையங்களை அதிகரித்து தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் ஒரு மையத்திற்கு 100 முதல் 200 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் செயல்படும். இந்த முகாமில் பங்கேற்கச் செய்யும் வகையில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு பின் விளைவு ஏற்படுகிா என பரிசோதித்த பின்னரே அனுப்பி வைக்கப்படுவா்.

இந்த மாதம் கூடுதலாக 17 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. ஒவ்வொரு மாதமும் இரண்டு கோடி தடுப்பூசிகள் செலுத்த திட்டம் வகுப்பட்டுள்ளது. எல்லை மாவட்டங்களிலும் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசியை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.நிகழ்ச்சிகளில் கூட்டமாக பங்கேற்று திரும்பவதால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடந்த 10 நாள்களில் 45 லட்சம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாமிற்கான தற்போது 30 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com