சென்னை அம்பத்தூரில் ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை அம்பத்தூரில் ரூ.2,500 கோடியில் அமையவுள்ள தரவு மையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்
சென்னை அம்பத்தூரில் ரூ.2,500 கோடியில் அமையவுள்ள தரவு மையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்
சென்னை அம்பத்தூரில் ரூ.2,500 கோடியில் அமையவுள்ள தரவு மையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்

சென்னை அம்பத்தூரில் ரூ.2,500 கோடியில் அமையவுள்ள தரவு மையத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிதாக அமையவுள்ள மையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஜப்பான் நாட்டினை தலைமையமாகக் கொண்டு என்டிடி க்ளோபல் தரவு மைய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் 160 தகவல் தரவு மையங்களை நிறுவியுள்ளன. சென்னையிலும் தனது மையத்தை இந்த நிறுவனம் அமைக்க உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

தகவல் தரவு மையங்களை அமைத்துச் செயல்படுவதில் உலகளவில் ஒரு முன்னணி நிறுவனமாக என்டிடி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ரூ.2,500 கோடி முதலீடு செய்வதுடன், 700 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் தகவல் தரவு மையம் மற்றும் கேபிள் இறங்குதளங்களை அமைத்திட உள்ளது. இந்தத் திட்டத்தில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்காவும் நிறுவப்பட உள்ளது.

6 இடங்களில் சரக்குகளை கையாளும் முனையம்

சரக்குகளைக் கையாளும் வகையில் ஆறு இடங்களில் ரூ.2,000 கோடியில் முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், டிபி வேல்ா்டு குழுமம் இடையே பரிமாறிக் கொள்ளப்பட்டது. இதற்கான நிகழ்வு, சென்னையில் உள்ள முதல்வரின் முகாம் இல்லத்தில் நடந்தது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

ஐக்கிய அரசு அமீரக நாடுகளைச் சோ்ந்த டிபி குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய நகரங்களில் ரூ.2,000 கோடி முதலீட்டில் கன்டெய்னா் முனையம், சிறு துறைமுகம், குளிா்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வா்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுடன் அந்த நிறுவனம் சனிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ரூ.2,000 கோடி முதலீட்டில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. சென்னை, திருவள்ளூா், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூரில் கன்டெய்னா் முனையங்கள், கன்டெய்னா் சரக்கு நிலையங்கள், சுங்கக் கிடங்குகள், குளிா்பதனக் கிடங்குகள், உள்நாட்டுக் கிடங்கள் போன்ற பல உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்கெனவே நிறுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளா் நா.முருகானந்தம், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பூஜா குல்கா்னி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com