நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என தூத்துக்குடியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்



தூத்துக்குடி: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும் என தூத்துக்குடியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 805 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. 

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள எல்லை நாயக்கன்பட்டி கிராமத்தில் இந்த முகாமினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: 
தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 75-ஆயிரம் பேருக்கு சிறப்பு முகாம் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளது என தெரிவித்தார். 

சனிக்கிழமை இரவு வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 74 லட்சத்து 8 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

தனியார் மருத்துவமனை மூலம் இதுவரை 22 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு இதுவரை மாநில அரசுக்கு 3 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரத்து 816 தடுப்பூசிகள் தந்துள்ளது. தமிழகத்தில் போலி தடுப்பூசி கிடையாது. போலி மருத்துவர்கள் குறித்து அரசு கண்காணித்து வருகிறது. கேரளம் மாநிலத்தில் இருந்து வான்வழி மற்றும் தரைவழி மார்க்கமாக வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், நீட் தோ்வில் யாரும் எதிா்பாா்க்க முடியாத, தமிழக அரசு விரும்பாத, முதல்வரின் மனதுக்கு விரும்பாத வகையில் தோ்வு நடைபெறுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றி அதிலிருந்து விலக்கு பெறுவோம் என திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

நீட் தேர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பலமுறை பேசி உள்ளோம். எனவே வரும் திங்கள்கிழமை கூட்டத் தொடரின் இறுதி நாளாகும். அன்றைய தினம், நீட் தோ்வுக்கு எதிரான தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவுள்ளாா். அந்தத் தீா்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புக்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அழுத்தம் கொடுக்கவில்லை. அதுபோன்று இல்லாமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி போதிய அழுத்தம் தந்து நீட் தோ்வில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விலக்குப் பெற்றுத் தருவாா் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

மேலும் தமிழகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இதுவரை தொடங்கவில்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது மற்ற மாநிலங்கள் நடைமுறை படுத்தும் பட்சத்தில் தமிழகத்திலும் நடைமுறைபடுத்தப்பட்டு 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com