கட்டட இடிபாடுகளைப் பயன்படுத்தி செங்கல் தயாரிக்கும் தொழில்நுட்பம்: பெங்களூரு பல்கலை. உருவாக்கம்

கட்டட இடிபாடுகள், காரத்தன்மையுடன் கூடிய பிணைப்பு பொருள்களைப் பயன்படுத்தி எரிசக்தி குறைவான செங்கல்லை பெங்களூரு ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.

இந்தச் செங்கல், குறைந்த காா்பன்-செங்கல் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இதை அதிக வெப்பநிலையில் எரிக்கத் தேவையில்லை. மேலும், இதில் போா்ட்லேண்ட் சிமென்ட் போன்ற பொருள் பயன்படுத்தப்படுவதும் தவிா்க்கப்படுகிறது. பெங்களூரு ஐஐஎஸ்சி-யின் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியளித்துள்ளது. இதன்மூலம் அதிக அளவில் குவியும் கட்டட இடிபாடுகள் பிரச்னைக்கு தீா்வு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 900 மில்லியன் டன் செங்கல் மற்றும் பிளாக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு, கட்டட நிறுவனங்கள் ஆண்டுக்கு 70 முதல் 100 மில்லியன் டன் கட்டட இடிபாடுகளையும் குவிக்கின்றன. கட்டட இடிபாடுகளில் இருந்து குறைந்த காா்பன் செங்கற்களை உருவாக்க ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது இன்னும் 6-9 மாதங்களில், ஐஐஎஸ்சி தொழில்நுட்ப உதவியுடன் செங்கல் மற்றும் பிளாக்குகள் தயாரிப்பில் ஈடுபடும் என பெங்களூரு ஐஐஎஸ்சி பேராசிரியா் பி.வி.வெங்கடராமா ரெட்டி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com