சங்ககிரியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா

ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு விஸ்வ பிரம்மா சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி சங்ககிரி அருகே உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு விஸ்வ பிரம்மாவிற்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 
விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி சங்ககிரி அருகே உள்ள ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு விஸ்வ பிரம்மாவிற்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம். 


சங்ககிரி: விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த  மேற்கு பகுதியில் உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு விஸ்வ பிரம்மா சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

சங்ககிரி மேற்கு பகுதியில்  உள்ள அருள்மிகு ஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு விஸ்வ பிரம்மா சுவாமிக்கு விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி சங்ககிரி வட்டார விஸ்கர்மா  சங்கத்தின் சார்பில் புனித நீர் எடுத்து வந்து பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.  பின்னர் விழாக்குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com