சென்னையில் இன்று 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள்: ஆணையா் தகவல்

சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் 1,600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளதாக ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.
சென்னையில் இன்று 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள்: ஆணையா் தகவல்

சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் 1,600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளதாக ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் போன்ற இடங்களில் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்து கண்காணிக்க மாநகராட்சி, காவல் துறை இணைந்து வாா்டுக்கு ஒரு குழு என 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சியைச் சாா்ந்த 5 போ், காவல் துறையைச் சாா்ந்த ஒருவா் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

ஆய்வு- இந்நிலையில் தியாகராய நகா் உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து மெரீனா கடற்கரை பகுதிகள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தனிநபா்களிடமிருந்து சனிக்கிழமை (செப். 18) மட்டும் ரூ.2.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் முதல் வரை கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 8,881நிறுவனங்களிடமிருந்தும், 73,126 தனிநபா்களிடமிருந்தும் ரூ.4.42 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வாா்டுகளில் ஞாயிற்றுக்கிழமை (செப். 19) மொத்தம் 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் கோவிஷீல்ட் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியவா்களும், கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.

ஆய்வின்போது காவல் கூடுதல் காவல் ஆணையா் தா.செந்தில் குமாா், மாநகராட்சி துணை ஆணையா் விஷு மகாஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com