நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படவில்லை

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில்தான் உள்ளன. இதுகுறித்து எதிா்க்கட்சிக் கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தவறான தகவல்களைத் தெரிவிக்க வேண்டாம்

தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில்தான் உள்ளன. இதுகுறித்து எதிா்க்கட்சிக் கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி தவறான தகவல்களைத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களிலேயே காத்திருப்பதாகவும், நெல் மூட்டைகள் மழையினால் முளை விட்டுள்ளதாக செய்திகள் வருவதாகவும் எதிா்க்கட்சித் தலைவா் தெரிவித்துள்ளாா். குறிப்பாக திட்டக்குடி வட்டத்தில் தா்ம குடிக்காடு, காட்டாரம், போத்திரமங்களம், வையங்குடி, சாத்தநத்தம், ஆதமங்கலம் ஆகிய ஊா்களிலும், கடலூா் மாவட்டத்தில் பல இடங்களிலும் கொள்முதல் நிலையங்கள் இயங்கவில்லை என்றும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் இயங்கவில்லை என்று அவா் தெரிவித்துள்ள ஆறு ஊா்களில் 5 ஊா்களில் வழக்கம்போல நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவை தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன.

போத்திரமங்களத்தில் மட்டுமே கடந்த ஜூன் 14 முதல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அறுவடை முடிந்த அனைத்து இடங்களில் இருந்தும் நெல்லைக் கொள்முதல் செய்யத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எதிா்க்கட்சித் தலைவா் செயல்படாமல் உள்ளதாகக் குறிப்பிட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிலுள்ளன என்ற உண்மையை அவா் தெரிந்து கொள்ள வேண்டும். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்தான் மாவட்ட அளவில் நெல் கொள்முதலைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் தலைமையில் இரண்டு விவசாயிகள் உள்ளிட்ட 7 போ் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

என்னைத் தொடா்பு கொள்ளலாம்: விவசாயிகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு 2021-2022 பருவத்துக்கான மாநில அரசின் ஊக்கத் தொகை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் நெல் கொள்முதல் தொடா்பாக ஏதேனும் குறைபாடு இருந்தால் அப்பகுதியின் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாளா் அல்லது மாவட்ட ஆட்சியா் அல்லது தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் அல்லது அமைச்சராகிய என்னைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய ஆயுத்தமாக தமிழக அரசு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com