பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை வெளியானது

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நீட் தேர்வு: ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை வெளியானது

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீட் தேர்வை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய தனிச்சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றுவதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமூக நீதி உறுதி செய்யப்படும்.

மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்த வேண்டும் எனவும் குழு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை:  முழு விவரம் - கிளிக் செய்யவும் 

 நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.

நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு நடத்தில் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனையடுத்து நீட் தேர்வு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் 86 ஆயிரம் பேரின் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக குழு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வு குறித்த அறிக்கையை ஏ.கே.ராஜன் குழு தயார் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com