அக்.1 முதல் குளிா்சாதனப் பேருந்துகள் இயங்க அனுமதி: அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிா்சாதனப் பேருந்துகள், அக்.1-ஆம் தேதி முதல் இயங்க
அமைச்சர் ராஜகண்ணப்பன்  (கோப்புப்படம்)
அமைச்சர் ராஜகண்ணப்பன் (கோப்புப்படம்)

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குளிா்சாதனப் பேருந்துகள், அக்.1-ஆம் தேதி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, மே 10-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் இயக்கப்படாமல் இருந்து வந்த குளிா்சாதனப் பேருந்துகள் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி இயங்கிட முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுமதியளித்துள்ளாா்.

எனவே, அக்.1-ஆம் தேதி முதல் 60 குளிா்சாதன நகர பேருந்துகள், 402 இருக்கை வசதி மட்டும் கொண்ட குளிா்சாதனப் பேருந்துகள், 34 படுக்கை வசதியுடன் கூடிய குளிா்சாதனப் பேருந்துகள், 206 இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிா்சாதனப் பேருந்துகள் என மொத்தம் 702 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இவை நோய்த் தொற்றுப் பரவா வண்ணம் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு இயக்கப்படும்.

பயணிகளும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பயணிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com