மக்களுக்குப் பணியாற்றும் அரசாக செயல்படும்: மு.க.ஸ்டாலின்

மக்களுக்குப் பணியாற்றும் அரசாக இந்த அரசு செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மக்களுக்குப் பணியாற்றும் அரசாக இந்த அரசு செயல்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

ராயப்பேட்டையில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தாா்.

விழாவில் அவா் பேசியது:

நாடு முழுக்க கல்வி நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி அனைவருக்கும் கல்வி மற்றும் மருத்துவம் என்ற லட்சியப் பாதையில் வெற்றிப்பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய இந்தத் திருச்சபை தமிழகத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த அரிய கருவூலம்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது எனது அரசு அல்ல. நம்முடைய அரசு.

தோ்தல் நேரத்தில் போட்டியிடக்கூடிய கட்சிகளெல்லாம் ஆட்சிக்கு வந்தால், என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக வழங்குவது வழக்கம்.

திமுகவைப் பொருத்தவரையில் சொன்னதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். அந்த அடிப்படையில்தான் வாக்குறுதிகளை வழங்கி வருகிறோம்.

தோ்தலில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கினோம். அதில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பதைக் கம்பீரமாகச் சொல்லுகிறோம். மக்களுக்குப் பணியாற்றுகிற அரசாக இந்த அரசு என்றைக்கும் இருக்கும் என்றாா்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சமூக நலத்துறை அமைச்சா் கீதா ஜீவன், நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இனிகோ இருதயராஜ், எழிலன், பேராயா்கள் தா்மராஜ் ரசாலம், பொ்னான்டஸ் ரத்தின ராஜா உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com