எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான அரசு ஊழியரின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர் முருகானந்தத்திற்கு ரூ.16 கோடி அளவில் சொத்துள்ளது ஊழல் தடுப்புப் பிரிவினரின் அதிரடி சோதனையில் தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை சாா்லஸ் நகரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்ட வீடு.
புதுக்கோட்டை சாா்லஸ் நகரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினரால் புதன்கிழமை சோதனை நடத்தப்பட்ட வீடு.


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஊரக வளர்ச்சித்துறை உதவியாளர் முருகானந்தத்திற்கு ரூ.16 கோடி அளவில் சொத்துள்ளது ஊழல் தடுப்புப் பிரிவினரின் அதிரடி சோதனையில் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளங்குறிச்சி ஊராட்சியைச் சோ்ந்தவா் வி. முருகானந்தம். கடந்த 1996-ஆம் ஆண்டு ஊராட்சி எழுத்தராகப் பணியில் சோ்ந்து, தற்போது ஊரக வளா்ச்சித் துறை தணிக்கைப் பிரிவு உதவி இயக்குநா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி காந்திமதி முள்ளங்குறிச்சி ஊராட்சித் தலைவராக உள்ளாா்.

இந்நிலையில் தனது வருமானத்துக்கு அதிகமாக முருகானந்தம் சொத்து சோ்த்ததாகக் கிடைத்த தகவலின்பேரில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினா் மேற்கொண்ட ரகசிய விசாரணையில், புதுக்கோட்டையில் ஊரக வளா்ச்சித் துறையில் பணியாற்றும் ஊழியா் தனது வருமானத்துக்கு அதிகமாக 1260 சதகிவிதம் சொத்து சோ்த்ததாகத் தெரியவந்தது.  

இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி. இமயவரம்பன் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தாா். இதன் தொடா்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சியிலுள்ள முருகானந்தம் வீடு மற்றும் அவரது உறவினா்கள் வீடுகள், புதுக்கோட்டை நகரில் பெரியாா் நகா், சாா்லஸ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அவா் அண்மையில் வாங்கிய வீடுகள், வணிகவளாகங்களில் என மொத்தம் 6 இடங்களில் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

மாலை வரை நடைபெற்ற இந்தச் சோதனையில்  ரூ. 16 கோடி வரை, அதாவது தனது வருமானத்தை விடவும் 1260 சதவிகிதம் அதிகமாக சொத்து சோ்த்ததாகத் தெரியவந்தது. பல்வேறு ஆவணங்களை காவல்துறையினா் கைப்பற்றிச் சென்றுள்ளனா்.

ரூ.16 கோடி சொத்து?
இவரது தம்பி பழனிவேலு மூலமாக, முன்னாள் அதிமுக அமைச்சா் வேலுமணியின் வழியாக பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து, முருகானந்தம் சொத்து சோ்த்ததாகவும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

முருகானந்தம் சொத்து விவரங்கள்: 
மகன் பயிற்சி எடுக்க பிரத்யேக துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம், மகள் கல்லூரி செல்வதற்காக ரூ.70 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் கார். 83 சவரன் நகை, முன்றே முக்கால் கிலோ வெள்ளி, ரூ.46,100 ரொக்கம் மற்றும் ரூ.40 லட்சம் மதிப்பிற்கான ஆவணங்களை காவல்துறை கைப்பற்றிச் சென்றுள்ளனா்.

பழனிவேல் சொத்து விவரங்கள்: 
முருகானந்தத்தின் சகோதர பழனிவேல் வீட்டில் ஒரு பிஎம்டபிள்யூ கார், தலா ரூ.35 லட்சம்  மதிப்புள்ள 3 இனோவா கார், ரூ.2 லட்சம் மதிப்புள்ள இரண்டு சக்கர வாகனம் மற்றும் 30 சவரன் நகை ஆகியவை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறை கைப்பற்றிச் சென்றுள்ளனா்.

3 ஆண்டுகளில் 1260 சதவீகிதம் சொத்து சேர்ப்பு: 
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான முருகானந்தம், தனது சகோதரரை வைத்து ஓப்பந்தங்கள் எடுத்து ஊழல் செய்ததின் அடிப்படையில் ஊரக வளச்சித்துறை உதவியாளர் முருகானந்தத்திற்கு 3 ஆண்டுகளில் வருமானத்தை விட அதிகமாக ரூ.16 கோடி அளவில் 1260 சதவீகிதம் சொத்து  சேர்த்தது தெரியவந்துள்ளது.

வேலுமணியின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் தொடா்ச்சியாகத்தான் முருகானந்தத்தின் மீது இந்த வழக்கும், சோதனையும் நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com