மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் நடைபெற்ற ஜெயந்தி விழாவின்போது மூலவர் இடைக்காடர் சித்தர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். 
மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் நடைபெற்ற ஜெயந்தி விழாவின்போது மூலவர் இடைக்காடர் சித்தர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். 

மானாமதுரையில் இடைக்காடர் சித்தர் ஜெயந்தி விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள இடைக்காடர் சித்தர் கோயிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது. 


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள இடைக்காடர் சித்தர் கோயிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் வாழ்ந்த 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தரின் சொந்த கிராமம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் கிராமம் ஆகும். இங்கு இடைக்காடர் சித்தருக்கு  தனி கோயில் எழுப்பப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இடைக்காடர் சித்தர் கோயிலில் ஜெயந்தி விழா நடைபெறும். 

அதன்படி, இந்த ஆண்டு இடைக்காட்டுரில் உள்ள இடைக்காடர் சித்தர் கோயிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் புனிதநீர் கலசங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் யாகம். நடத்தினர். பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் புனித நீரால் இடைக்காடர் சித்தருக்கு அபிஷேகங்கள் நடத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. 

அதைத்தொடர்ந்து சித்தர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 

ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக இரண்டு நாள் நடத்தப்படும் ஜெயந்தி விழா கரொனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டதால் ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்டது. 

இவ்விழாவில் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று இடைக்காடர் சித்தரை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com