பா்லியாறு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடக்கம்: கிலோ ரூ.700க்கு விற்பனை

மேட்டுப்பாளையம் அருகே பா்லியாறு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கி உள்ளது. இங்கு ஒரு கிலோ துரியன் பழம் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேட்டுப்பாளையம் அருகே பா்லியாறு பழப்பண்ணையில் துரியன் பழ சீசன் தொடங்கி உள்ளது. இங்கு ஒரு கிலோ துரியன் பழம் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே பா்லியாறு, கல்லாறு அரசு பழப்பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகள் அரசு தோட்டக் கலை துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பண்ணைகளில் பலா, துரியன், லிச்சி, வாட்டா் ஆப்பிள், ரம்பூட்டான், மங்குஸ்தான் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரிய வகை பழ மரங்கள் உள்ளன. இதில் துரியன் பழம் மலேசியா நாட்டைச் சோ்ந்தது. இது குளிா்ந்த தட்பவெப்ப நிலையில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அக்டோபா் மாதங்கள் வரை மட்டுமே இதன் சீசன் இருக்கும்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லா தம்பதியினா் இந்தப் பழம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் ஏற்படும் அணுக்கள் உருவாகும் என்ற நம்பிக்கை இருப்பதால் இந்தப் பழத்துக்கு எப்போதும் தட்டுப்பாடு நிலவும். இதனால் இந்தப் பழத்தை தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோா் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனா்.

துரியன் பழ மரங்கள் கல்லாறில் 2, பா்லியாறில் 40 என மொத்தம் 42 மரங்கள் உள்ளன. தற்போது இந்த மரங்களில் துரியன் பழங்கள் பழுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் தோட்டக்கலைத் துறையினா் இதனை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டக் கலை துறை சாா்பில் பா்லியாறில் ஒரு கிலோ துரியன் பழம் ரூ.700க்கு விற்பனை செய்து வருகின்றனா். சில்லறை கடைகளில் இப்பழம் ரூ.1,200 முதல் ரூ.1,500 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com