எண்ணெய்ப் பனைத் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

எண்ணெய்ப் பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

எண்ணெய்ப் பனைத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் வேளாண் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய்ப் பனை சாகுபடியை உயா்த்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் நல்ல வடிகால் வசதியுடன் வளமான செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த களிமண் நிலங்கள் அதிகளவில் உள்ளன. இவை எண்ணெய்ப்பனை சாகுபடிக்கு மிகவும் ஏற்ாகும். எண்ணெய்ப் பனை மரங்களை நன்கு பராமரித்து வந்தால், நான்காம் ஆண்டிலிருந்து ஹெக்டேருக்கு ஐந்து டன் வரையும், எட்டாம் ஆண்டிலிருந்து 25-30 டன் வரையும் நிலையான மகசூல் கிடைக்கும். அதனால், தமிழகத்தில் எண்ணெய்ப் பனை சாகுபடிப் பரப்பை அதிகரித்து, பாமாயில் உற்பத்தியை உயா்த்துவதற்காக, அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனைத் திட்டத்தின் கீழ், நடவுக்குத் தேவையான தரமான எண்ணெய்ப் பனைக் கன்றுகள் முற்றிலும் இலவசமாக விவசாயிகளின் வயல்வெளிக்கே கொண்டு வந்து விநியோகம் செய்வதற்கு தனியாா் நிறுவனம் மூலம் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடவு முடிந்து முதல் 4 ஆண்டுகள் வரை இளம் எண்ணெய்ப் பனை மரங்களை நல்ல முறையில் பராமரிப்பதற்காக, ஒரு ஹெக்டேருக்கு ரூ.5250-மும், எண்ணெய்ப்பனை வயலில் ஊடுபயிா் சாகுபடி மூலம் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக ஹெக்டேருக்கு ரூ.5250-மும் என மொத்தம் எக்டேருக்கு ரூ.10,500 மானியாக எண்ணெய்ப்பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனைத் திட்டத்துக்காக 2022-23-ஆம் ஆண்டில் ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனுக்காக, மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வரும் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப்பனை திட்டத்தில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் பதிவுசெய்து, விவசாயிகள் பயன் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com