ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். டேவிதார் தாக்கல் செய்தார்.
ஸ்மார்ட் சிட்டி ஊழல்: முதல்வரிடம் அறிக்கை தாக்கல்


ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய தலைவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். டேவிதார் தாக்கல் செய்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சாவூா், சேலம், வேலூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் சீா்மிகு நகர (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, மொத்த மதிப்பீட்டில் மத்திய, மாநில அரசுகள் தலா பாதியளவு பங்களிப்பைச் செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

11 பெருநகரங்களுக்கும் சோ்த்து மொத்தமாக 644 திட்டங்கள் வரையறுக்கப்பட்டன. இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.10,651 கோடி. அவற்றில் ரூ.2,327.86 கோடி மதிப்பில் 257 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 339 பணிகள் ரூ.7,947.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. ரூ.153.97 கோடி மதிப்பிலான 10 திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளி மதிப்பீடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து சட்டப் பேரவையில் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ஸ்மாா்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடா்பாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட இருக்கிறது என்றாா்.

முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபிள்யூ.சி., டேவிதாா் தலைமையில் ஒருநபா் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவானது தனது பொறுப்புகளை ஏற்ற காலத்தில் இருந்து மூன்று மாதங்களில் அரசுக்கு அறிக்கையை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மக்களின் விருப்பத்தின்படிதான் நடைபெற்றதா?, திட்டத்துக்கான மத்திய, மாநில அரசுகளின் நிதி முறைப்படி செலவழிக்கப்பட்டதா?, பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டதா?, பணிகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பது குறித்து ஆணையம் நடத்திய விசாரணை ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், விசாரணை அறிக்கையை  சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை நேரில் சந்தித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபிள்யூ.சி., டேவிதாா் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com