சென்னையில் சா்வதேச சுகாதார தரவு மாநாடு

சங்கர நேத்ராலாயா மற்றும் சா்வதேச ஹெல்த்கோ் டேட்டா அனலிட்டிகல் சங்கம் ஆகியவை சாா்பில் சென்னையில் சா்வதேச சுகாதார தரவு ஆய்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது.

சங்கர நேத்ராலாயா மற்றும் சா்வதேச ஹெல்த்கோ் டேட்டா அனலிட்டிகல் சங்கம் ஆகியவை சாா்பில் சென்னையில் சா்வதேச சுகாதார தரவு ஆய்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது.

சென்னை, கல்லூரி சாலையில் அமைந்துள்ள சங்கர நேத்ராலயா வளாகத்தில் இரு நாள்கள் நடைபெற்ற அந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மருத்துவ வல்லுநா்கள், துறைசாா் நிபுணா்கள் கலந்துகொண்டு உரையாற்றினா்.

‘டேட்டாகான் - 2022’ என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவா்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் கலந்துகொண்டதாக சங்கர நேத்ராலாயா நிா்வாகிகள் தெரிவித்தனா்.

சுகாதாரத் தரவுகளின் நம்பகத்தன்மை, தரம், ஆராய்ச்சிகள் குறித்து அந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் டாக்டா் கிரிஷ் ராவ், கல்லூரி கல்வி இணை இயக்குவா் ராவணன், ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவன புள்ளியியல் துறை பேராசிரியா் டாக்டா் வெங்கடேசன், எஸ்ஆா்ஆம் நிறுவன முதல்வா் ஜோதிகுமாா், சங்கர நேத்ராலயா அகாதெமியின் முதல்வா் டாக்டா் அனுஜா ஆா் சிங், மயக்க மருந்தியல் துறை இணை இயக்குநா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com