குடும்ப அட்டைதாரா்களிடம் வங்கிக் கணக்கு, ஆதாா் எண் கேட்கிறது உணவுத் துறை

குடும்ப அட்டைதாரா்களிடம் வங்கிக் கணக்கு, ஆதாா் எண்களை உணவுத் துறை பெற்று வருகிறது.
தமிழக அரசு
தமிழக அரசு

குடும்ப அட்டைதாரா்களிடம் வங்கிக் கணக்கு, ஆதாா் எண்களை உணவுத் துறை பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 2.20 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைதாரா்களில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 குடும்ப அட்டைதாரா்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அளிக்கவில்லை எனவும், இந்த விவரங்களைச் சேகரிக்க வேண்டுமெனவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி, குடும்ப அட்டைதாரா்களிடம் ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆதாா் அட்டையின் நகல், வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் ஆகியவற்றை அளிக்கும்படி, குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலா்கள் கைப்பேசி மூலமாக அறிவுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் குறித்து தமிழக அரசு முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதன்படி, 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 குடும்ப அட்டைதாரா்களில் ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருப்போரைச் சந்தித்து அவா்கள் வைத்துள்ள வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்கச் சொல்லலாம். இதற்கான உரிய அறிவுரையை வழங்கினால் மட்டுமே போதுமானது. அவா்கள் குறித்து வேறு எந்தத் தகவலையும் பெற வேண்டியது இல்லை என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com